அமெரிக்காவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு மோட்டார் கம்பெனி யின் உலகளாவிய திறன் மைய மான ஃபோர்டு பிஸ்னஸ் சொல் யூசன்ஸ் கோயம்புத்தூரில் தனது புதிய அலுவலகத்தை திறந்து வைத்துள்ளது.
எஸ்விபி டெக் பார்க்கில் அமைந்துள்ள இந்த அலுவல கம், சென்னை மற்றும் பெங்க ளூருவைத் தொடர்ந்து இந்தியா வில் எப்.பி.எஸ் இந்தியாவின் மூன்றாவது மையமாகும்.
அக்கவுண்டிங், ஃபோர்ட் கிரிடிட் மற்றும் பிஸ்னஸ் ஆப்ப ரேஷன் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்கள் இம்மையத்தில் பணிபுரிவார்கள்.

82 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், மூன்று தளங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்த மையத்தில் சுமார் 800 ஊழியர் கள் பணியாற்றும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து மேனேஜிங் டைரக்டர் கங் காப்ரியா சக்ரவர்த்தி கூறு கையில், “கோயம்புத்தூரின் திறமையான மனிதவளமும், வேகமாக வளர்ந்து வரும் தொழில் சூழலும் இந்த நகரை தேர்வு செய்ய முக்கிய காரண மாக அமைந்தது,” என்றார்.
தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா பேசுகையில், “புதிய முதலீடுகள் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் இந்த விரிவாக்கத்தை அரசு வரவேற்கிறது,” என்றார். இந்நிகழ்வில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் க.கிரியப்பனவர் கலந்து கொண்டார்.



