கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெற்ற 2026 இந்தியா ஹோரேகா கண்காட்சியில், வணிக காப்பி இயந்திர விநியோக நிறுவனமான காப்பி சொல்யூஷன்ஸ் தனது புதிய காப்பி இயந்திரங்களை காட்சிப்படுத்தியது.
கஃபே, ஹோட்டல், உணவகம், பேக்கரி மற்றும் கார்ப்ப ரேட் துறைகளைச் சேர்ந்த தொழில் நிபுணர்கள் பங்கேற்ற இக்கண்காட்சியில், வணிக எஸ்பிரஸோ இயந்திரங்கள், பீன்-டு-கப் காப்பி இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரீமியம் காப்பி தயாரிப்பு தீர்வுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற காப்பி இயந்திரங் களைத் தேர்வு செய்வது, செயல்திறனை மேம்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து நிறுவன நிபுணர்கள் விளக்கமளித்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி விக்ரம் குவாரா, “இந்தியாவில் காப்பி கலாசாரம் வேகமாக வளர்ந்து வருகிறது,” என்றார்.



