fbpx
Homeபிற செய்திகள்புதிய மென்பொருள் உருவாக்கி 9ம் வகுப்பு மாணவன் சாதனை

புதிய மென்பொருள் உருவாக்கி 9ம் வகுப்பு மாணவன் சாதனை

கோவை காளப்பட்டியில் உள்ள ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளியில் 9-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவன் மோத்தீஷ். முத்துக்குமார் மற்றும் முத்துச்செல்வி ஆகியோரின் மகனான மோத்தீஸ், சிறு வயது முதலே கணிணி துறையில் ஆர்வ முடன் இருந்துள்ளார்..
இந்நிலையில் ,நவீன தொழிற்சா லைகளின் செயல்பாடுகளை எளி தாக்கும் வகையில் ‘தொழில்துறை பயன்பாடுகளுக்கான விதிமுறை அடிப்படையிலான தானியங்கி படிவ உருவாக்கி’ (Rule-Based Automatic Form Generator for Industrial Applications) என்ற புதிய மென்பொருளை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
மேம்பட்ட ‘பைதான்’ (Python) புரோகிராமிங் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மென்பொருள், மனித தவறுகள் ஏதுமின்றி தரவுகளைத் துல்லியமாக ஆட்டோமேஷன் முறையில் கையாள்கிறது.


வழக்கமான பள்ளி அறிவியல் திட்டங்களைப் போலன்றி, முற்றி லும் வணிக ரீதியிலான பயன் பாட்டிற்கு வந்துள்ள இந்த மென்பொருள், தற்போது தமிழ கத்தில் உள்ள முன்னணி அரசுத் துறை நிறுவனம் மற்றும் பல்வேறு முன்னணி பொறியியல், உற்பத்தி நிறுவனங்களின் முக்கிய ஆவணப் பணிகளை எளிதாக்கப் பயன் படுத் தப்பட்டு வருகிறது.
இது குறித்து மாணவன் மோத்தீஸ் கூறுகையில், தனது தந்தை இரவு நேரங்களில் அதிக நேரத்தை செலவிட்டு செய்யும் பணிகளை கண்டதால், இந்த புதிய மென்பொருளை உருவாக்க முயற்சி மேற்கொண்டதாக தெரிவித்தார்.
பைதான் மென்பொருளுடன் இணைத்து இதை மேம்படுத்தி இருப்பதாக தெரிவித்த அவர், தொழில்துறைகளில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு எளிதாக இந்த மென்பொருளை பயன்படுத்த முடியும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரிகளின் நிர்வாகப் பணிகளை டிஜிட்டல் மயமாக்கும் நோக்கில் காகிதப் பயன்பாட்டைக் குறைக்கும் அடுத்தகட்ட தானியங்கி படிவங்களையும் உருவாக்கும் முயற்சியில் ஈடுபட இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.


இந்த மைல்கல் சாதனையை செய்த மாணவனுக்கு ,ஸ்ரீ சைதன்யா பள்ளியின்,இயக்குனர்கள் சீமா மற்றும் நாகேந்திரா, செயல்பாட்டு துறை தலைவர் ஹரிபாபு ஜம்பானி, ஏ.ஜி.எம்.நாகேஸ்வர ராவ், ஆர்.ஐ.பாலகிருஷ்ணா பள்ளியின் முதல்வர் கோகிலவாணி ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
வகுப்பறைக் கல்விக்கும் தொழில் துறை தேவைகளுக்கும் இடை யிலுள்ள இடைவெளியைக் குறைத்து, நிஜ உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுள்ள மாணவன் மோத்திஷின் இந்த முயற்சி அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருவது குறிப்பிடதக்கது.

படிக்க வேண்டும்

spot_img