பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் மதுரை பழங்காநத்தம் கிளை அழகப்பன் நகர், 86& திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க மதுரை தலைவர் டாக்டர் நா.ஜெகதீசன் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். இதில் வங்கியின் கோவை துணை மண்டல மேலாளர் ராஜூ, மண்டல அலுவலக முதுநிலை மேலாளர் விக்னேஷ் மற்றும் கிளை மேலாளர் கே.தனுசியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



