கோவை அவிநாசி ரோட்டில் உள்ளகொடிசியா வளாகத்தில் 24 வது பதிப்பாக “அக்ரி இன்டெக் 2026” விவசாய வர்த்தக கண்காட்சி வருகிற 9-ந் தேதி தொடங்கி 13ஆம் தேதி முடிய 5 நாட்கள் நடக்கிறது
இது குறித்து கொடிசியா தலைவர் ரங்கசாமி செயலாளர் விஜய் ஆனந்த், அக்ரி இன்டெக் 2026 சேர்மன் ஸ்ரீ ஹரி, உதவி சேர்மன் விஜயகுமார்ஆகியோர் கூறியதாவது:-
அக்ரி இன்டெக் 2026 வேளாண்மை கண்காட்சி கோவை கொடிசியா வளாகத்தில் வருகிற 9-ந் தேதிதொடங்குகிறது 13ஆம் தேதி வரை 5 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 660க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெறுகின்றன இந்தியா முழுவதும் இருந்து ஒன்றரை லட்சம் விவசாயிகள்பார்வையாளர்களாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்ப டுகிறது.
இந்த கண்காட்சியில் தமிழ்நாடு, டெல்லி, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான், புதுச்சேரி உள்பட இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களும் பங்கேற்கின்றன.
கண்காட்சி நேரம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும்
9ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் முதன்மை விருந்தினராக சக்தி சுகர்ஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் எம்.மாணிக் கம், சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழக துணைவேந்தர் பொறுப்பு டாக்டர் கே.சுப்பிரமணியன், டாக்டர் ஜெயலலிதா மீன் வளர்ப்பு பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் பெலிக்ஸ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
கண்காட்சியைகாண வரும் பொது பார்வையாளர்களுக்கு நுழைவு கட்டணமாக ரூ50 வசூலிக்கப்படும். மேலும் தகுந்த அடையாளச் சான்று உள்ள விவசாயிகளுக்கு நுழைவு கட்ட ணம் இலவசம்.
மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.



