fbpx
Homeபிற செய்திகள்கோவையில் 78வது பட்டயக் கணக்காளர் தின கொண்டாட்டம்

கோவையில் 78வது பட்டயக் கணக்காளர் தின கொண்டாட்டம்

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் சார்பில் 78வது பட்டயக் கணக்காளர் தின விழா, கோவை துடியலூரில் உள்ள ஐ.சி.ஏ.ஐ பவனில் சிறப்பாக நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்று நிகழ்ச்சியில், தென்னிந்திய ஆடிட்டர்கள் சங்கத் தலைவர் சி.ஏ. எஸ். வெங்க டேஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கோவை ஐ.சி.ஏ.ஐ கிளைத் தலைவர் சி.ஏ. சுர்வஜித் எஸ். கிருஷ்ணன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவை யொட்டி மரக்கன்றுகள் நடுதல், ரத்ததான முகாம் நடைபெற்றது.
மாலை நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில், தென் னிந்திய மண்டலக் குழுவின் முன்னாள் தலைவர் சி.ஏ. கே. ஜலபதி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். கோவையின் மூத்த பட்டயக் கணக் காளரான சி.ஏ.எம். அழகிரிசாமி, தொழிலில் 30 ஆண்டுகளை நிறைவு செய்த பட்டயக் கணக்காளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவித்தார்.
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுமதி, தொழில்முறை வாழ்வில் நெறிமுறைகளும் நேர் மையும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
விழாவில் பேசிய சுர்வஜித் எஸ். கிருஷ்ணன், “பட்டயக் கணக்காளர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img