fbpx
Homeபிற செய்திகள்ஆயக்குடி கல்வி ஆசான் அமானுல்லா 50 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

ஆயக்குடி கல்வி ஆசான் அமானுல்லா 50 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு

பழைய ஆயக்குடியில் சுமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு ஏழை எளிய மாணவர்கள் மீது மிகவும் அக்கறை கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்தி சேவையாற்றியவர் அமானுல்லா. அவரது 50 வது ஆண்டு நினைவு தினம் பழைய ஆயக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் அமானுல்லா நினைவு நற்பணி மன்றத்தின் சார்பாக அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அவரிடம் கல்வி பயின்று பல்வேறு துறைகளில் உயர் பதவிகள் வகித்து ஓய்வு பெற்றோர் பலர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கூட்டத்தினை பள்ளியின் தலைமை ஆசிரியை சிலம்புச் செல்வி தலைமை ஏற்று நடத்தினார். பள்ளியில் கடந்த ஆண்டு 10 ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் மூன்று மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் ஏழை எளிய மாணவர்களுக்கு சீருடைகளும், பெரிய அளவிலான நோட்டுகளும் வழங்கப்பட்டன. மற்றும் பள்ளியின் ” புரவலர் நிதிக்காக ” மன்றத்தின் சார்பாக ரூபாய். 15,000 நன்கொடையாக வழங்கப்பட்டது.

கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜா ரவிவர்மா, பாரத் பெட்ரோலிய முன்னாள் பொது மேலாளர் தங்கவேல், யூகோ வங்கி முன்னாள் உதவிப் பொது மேலாளர் குழந்தைவேல், ஸ்டேட் வங்கி முன்னாள் மேலாளர் பாலச்சந்திரன், இந்தியன் வங்கியின் முன்னாள் முதுநிலை மேலாளர் சீனிவாசன், ரயில்வே முன்னாள் அதிகாரி ஆசைத்தம்பி, பாலசுப்பிரமணியன், முன்னாள் நடத்துனர் லோகநாதன், அப்துல் மஜீத் மற்றும் பல உயர் அதிகாரிகள் உரையாற்றினர். அமானுல்லாவின் உறவினர்கள், பள்ளி மாணவர்கள், பள்ளி ஆசிரியர்கள் என அனைவரும் கலந்து கொண்டு கூட்டத்தினை சிறப்பித்தனர். இறுதியில் மாதவி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img