fbpx
Homeபிற செய்திகள்ஈரோடு நந்தா கலை கல்லூரியில்முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்

ஈரோடு நந்தா கலை கல்லூரியில்முதலாமாண்டு வகுப்புகள் துவக்கம்

ஈரோடு நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகளின் துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நந்தா கல்வி அறக்கட்டளை உறுப்பினர் எஸ். பானுமதி சண்முகன் குத்து விளக்கேற்றினார். தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தனர்.
அவர் பேசும்போது, கல்லூரியின் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலமாக அளிக்கப்படும் பயிற்சியால் தலைசிறந்த நிறுவனங்கள் மாணவர்களைத் வேலைக்கு தேர்வு செய்துள்ளனர். இதில் சென்ற ஆண்டில் மட்டும் 87% மாணவர்கள் பணி நியமன ஆணைகளைப் பெற்று உள்ளனர் என்றார்.

கல்லூரியின் முன்னாள் முதல்வர் ஆர்.குப்புசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். கல்லூரியின் முதல்வர் எஸ்.மனோகரன், கல்லூரி இணை நிர்வாக அறங்காவலர்களான எஸ்.நந்தகுமார் பிரதீப் மற்றும் எஸ்.திருமூர்த்தி, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.கோமதி சுப்பிரமணியம், நிர்வாக அலுவலர் முனைவர். வி.சி. சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img