கோவை உப்பிலிபாளையம் ராஜீவ் காந்தி நகர் சங்க மைதானத்தில், பெண்களின் முன்னேற்றம், உடல்நலம் மற்றும் சமூக விழிப்புணர்வை வலியுறுத்தும் ‘கோமகள் மாரத்தான் 2026 – ரன் ஃபார் ஹர்’ நிகழ்ச்சிக்கான அதிகாரப்பூர்வ டி-ஷர்ட் வெளியீட்டு விழா நடந்தது.
ஆஃப் ஸ்கிரீன் ஹப் மற்றும் நிர்மலா மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய விழாவில், சிங்காநல்லூர் எம்.எல்.ஏ., கே.எஸ். ஸ்ரீ கிரி பிரசாத் டி–ஷர்ட்டை வெளியிட்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
விழாவில் ஓட்ட வீரர் விஜய் ஆனந்த், ராபர்ட் போஷ் நிறுவன மனிதவளத் தலைவர் வனிதா, ஆட்டம் இன்ஃபினிட்டி நிறுவனத்தின் ராஜேஷ், டாக்டர்கள் நித்யா, மல்லிகா, கே. மோகனா, பார்வதி ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பெண்களின் பாதுகாப்பு,சமத்துவம்,உடல்நலம் மற்றும் அதிகாரமளிப்பை வலியுறுத்தும்
சமூக இயக்கமாக இந்த மாரத்தான் அமையும் என அவர்கள் தெரிவித்தனர்.



