fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் - போலீஸ் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிகாவல்துறை துணை ஆணையர்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் – போலீஸ் சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணிகாவல்துறை துணை ஆணையர் சிறப்புரை

கோவை துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலி டெக்னிக் கல்லூரி போதை பொருள் தடுப்பு குழு மற்றும் காவல்துறை சார்பாக துடியலூரில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியை கோவை மாநகர காவல் துறை வடக்கு துணைஆணையர் தங்கதுரை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடி அசைத்து தொடங்கி வைத் தார். பேரணியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலி டெக்னிக் கல்லூரி போதைப் பொருள் தடுப்பு குழு மாணவர்கள், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் துடியலூர் காவல் நிலைய காவலர்கள் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

பேரணியில் சென்ற மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட் டீஸ்களை பொதுமக்களுக்கு வழங்கினர். பேரணியானது துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் தொடங்கி கோவை மேட்டுப்பாளையம் சாலை வழியாக சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று விஸ்வநாதபுரம் அருகே நிறைவடைந்தது,
முன்னதாக துடியலூர் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு வந்த துணை ஆணையர் தங்க துரைக்கு ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலி டெக்னிக் கல்லூரி தேசிய மாணவர் படை மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் டாக்டர் டி கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வர வேற்று பேசினார். துணை ஆணையர் தங்கத்துரை மாணவர் களிடையே போதைப் பொருள் விழிப்புணர்வு பற்றி சிறப்புரையாற்றினார்.
அவர் பேசும்போது மாணவர்கள் போதைப் பொருளினால் ஏற்படும் தீங்குகளை முக்கியமாக அறிந்து வைத்திருக்க வேண்டும் மற்றும் சமூகத்தில் யாரேனும் போதைப்பொருள் உபயோ கிப்பது தெரிந்தால் அவர்களை நல்வழிப்படுத்த போதையில் இருந்து மீட்டெடுக்க தங்களால் இயன்ற உதவிகளை அவர்களுக்கு வழங்க வேண்டும். போதையில்லா தமிழகம் உருவாக்க மாணவர்களாகிய நீங்கள் முழுமுனைப்புடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து சாய் பாபா காலனி சரக உதவி ஆணையர் சரவணன் போதைப் பொருள் விழிப்புணர்வு உறுதிமொழி வாசிக்க அனைவரும் கைகளை உயர்த்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பெரியநாயக்கன்பாளையம் துணைக் காவல் கண்காணிப்பாளர் பொன்னுசாமி, துடியலூர் காவல் நிலைய ஆய்வாளர் விவேகானந்தன், கவுண்டம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் கந்தசாமி, குற்றப்புலனாய்வு பிரிவு ஆய்வாளர் முத்துலட்சுமி, புலனாய்வு கட்டுப்பாட்டு அமைப்பு முரளி கிருஷ்ணன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், பார்த்திபன், துடியலூர் காவல் நிலைய காவலர்கள், போதை தடுப்பு மன்ற தலைவர் பூபால்ராஜ், தேசிய மாணவர் படை தலைவர் ரகுபதி, நாட்டு நலப்பணித் திட்ட தலைவர் விணு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img