கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராம கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது, சிங்கப்பூர் நிறுவனமான ஐ ஜீனியஸ் ஏஐ பிரைவேட் லிமிடெட் உடன் கடந்த மாதம் புரிந்துணர்வு ஒப் பந்தம் மேற்கொண்டது.
அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ள ஹேக்கத்தான் 3.0 நிகழ்விற் கான இணையதள வெளியீட்டு விழா நேற்று (வியாழக்கிழமை) கல்லூரி யின் கருத்தரங்க அறையில் நடைபெற்றது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி யின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் விழாவிற்குத் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக, சிங்கப்பூர் ஐ ஜீனியஸ் ஏஐ பிரைவேட் லிமிடெட்டின் நிறுவனர் – முதன்மை கட்டமைப்பாளர் காளிராஜன் பஞ்சலிங்கம் கலந்து கொண்டார். 24 மணிநேர ஹேக்கத்தான் 3.0 போட்டிக்கான இணைய தளத்தை கல்லூரியின் முதல்வர் வெளியிட, சிறப்பு விருந்தினர் பெற்றுக் கொண்டார்.
இந்த 24 மணி நேர ஹேக்கத்தான் போட்டியில் பங்கேற்க எந்தவித கட்டணமும் இல்லை.
இந்தியா முழுவதிலும் இருந்து அனைத்து இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களும் பங்கேற் கலாம்.போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர் https://hackathon2026.in என்ற இணைய இணைப்பின் வழியாக ஜுலை 31 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு தொடர்பான சந்தேகங்களுக்கு 9629924052, 984294634, 8778241551, 9345060349 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.
ஹேக்கத்தான் போட்டி களானது ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது என கல்லூரியின் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் சிறப்பு விருந்தினர் பேசும்போது, ஹேக்கத்தான் போட்டி களின் முக்கியத்துவம் பற்றியும், அதனால் மாணவர்கள் அடையும் நன்மைகள் குறித்தும் விரி வாகப் பேசினார்.
தொழில், புதுமை மற்றும் உட்கட்டமைப்பு, தரமான கல்வி, ஆரோக்கியம் உள்ளிட்ட 17 எஸ்.டி.ஜி குறிக் கோள்களை (SDG Goals)அடிப்படை யாகக் கொண்டு மாணவர்கள் தங்களின் தொழில்நுட்பம் மற்றும் படைப்பாற்றல் திறன்களை வெளிப்படுத்து வதற்கான வாய்ப்பை இந்த ஹேக்கத்தான் போட்டி வழங்கவுள்ளது.
இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ. 1,00,000, இரண்டாம் பரிசு பெறும் அணிக்கு ரூ.50,000 மற்றும் மூன்றாம் பரிசு பெறும் அணிக்கு ரூ.25,000 ரொக்கம் வழங்கப்படவுள்ளன. இதில், தேர்வு செய்யப் படும் முதல் மூன்று அணிகளை ஊக்குவிக்கும் வகையில், டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெறும் அறிவியல் மற்றும் புதுமை போட்டியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். அதற்கான அனைத்து
செலவினங்களையும் ஐ ஜீனியஸ் ஏஐ நிறுவனம் இலவசமாக வழங்க உள்ளது.
மேலும், சிறந்த திறமையாளர்களுக்கு வாய்ப்பு வழங்கும் நோக்கில், ஐ ஜீனியஸ் நிறுவனம் இலவச மைக்ரோசாஃப்ட் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகளையும், நேரடி தொழில்துறை திட்டங்களில் பணியாற்றும் வாய்ப்பையும் வழங்க உள்ளது.
முன்னதாக, தகவல் தொழில்நுட்பத் துறைத்தலைவர் முனைவர் என்.சுமதி வரவேற்றார்.
முடிவில் கணினி அறிவியல் மற்றும் தரவு பகுப்பாய்வுத் துறைப் பேராசிரியர் மோ. பிரனீஷ் நன்றி கூறினார்.



