fbpx
Homeபிற செய்திகள்கோவையில் காசா கிராண்டு கிரவுன் அலுவலக வளாகம் திறப்பு

கோவையில் காசா கிராண்டு கிரவுன் அலுவலக வளாகம் திறப்பு

காசா கிராண்டு குழுமத்தின் வணிக ரியல் எஸ்டேட் பிரிவான காசா கிராண்டு கமர்ஷியல், கோயம்புத்தூர் சந்தையில் தனது முதல் வணிக ரியல் எஸ்டேட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது. 

அவிநாசி சாலையில் சுமார் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த அலுவலக வளாகம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஐடிஇஎஸ் நிறுவனங்கள், உலகளாவிய திறன் மையங்கள் (GCC), ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள், கோ-வொர்க்கிங் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் அலுவலகங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த வளாகம் முழுவதும் ஏற்கனவே ‘IndiQube’ நிறுவனத்தால் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இது, கோவை சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் முக்கிய குடியிருப்பு மற்றும் வணிக மையங்களுடன் எளிதான இணைப்பைக் கொண்டுள்ளது.

காசாகிராண்டு குழுமத்தின் துணை நிர்வாக இயக்குநர் சிவசங்கர் ரெட்டி கூறுகையில், “தென்னிந்தியாவின் முக்கிய வணிக நகரங்களில் ஒன்றான கோவையில் காசாகிராண்டு கமர்ஷியல் கால்பதிப்பது மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img