கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை யில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவிக் கையில், தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளை களைவ தற்காகவும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று உரிய விசாரணை மேற்கொண்டு, தகுதியான பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காகவும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமைதோறும் நடைபெற்று வருகிறது.
கூட்டத்தில் பொதுமக்க ளிடமிருந்து 781 மனுக்கள் பெறப்பட்டன.பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் புண்ணியகோட்டி,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தீபா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழ்கனி மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



