கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த காட்டேரியில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் அனுசரிக்கப்பட்டது.
நாட்டு நலப்பணித் திட்டம், தமிழாய்வுத்துறை மற்றும் இதய நிறைவு தியான அமைப்பு இணைந்து நடத்திய நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ந.குணசேகரன் தலைமை வகித்தார்.
யோகா பேராசிரியர்கள் அருள்நிதி, தா.பிரேமா மற்றும் எம்.ஜெயலட்சுமி ஆகியோர் யோகாவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் துணை முதல்வர், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். வெள்ளை நிற உடையணிந்து, யோகா தரைவிரிப்புகளுடன் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரும், 160-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களும் பங்கேற்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.



