கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள புனித அருளானந்தர் ஆலயத்தில், புனித வின்சென்ட் தே பவுல் சபை சார்பில் 125 ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது. இந்த கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் தொடர்ந்து நான்காவது ஆண்டாக நடைபெற்று வருகிறது.
இந்த நிதி, புனித அருளானந்தர் ஆலய இறைமக்களின் காணிக்கைகள், புனித வின்சென்ட் தே பவுல் சபை உறுப்பினர்களின் பங்களிப்பு மற்றும் உபகாரிகளின் நிதியுதவியால் திரட்டப்பட்டது.
விழாவை புனித அருளானந்தர் ஆலய பங்குத்தந்தை அருட்பணி ததேயு பால்ராஜ் மற்றும் உதவி பங்குத்தந்தை அருட்பணி அருள் இருதயராஜ் ஆகியோர் முன்னிலை வகித்து நடத்தினர். அவர்களுக்கு சபை உறுப்பினர்கள் நன்றி தெரிவித்தனர்.
விழா ஏற்பாடுகளை புனித வின்சென்ட் தே பவுல் சபை தலைவர் ராஜேஸ், துணைத் தலைவர் பிரதாப், செயலாளர் சுகுனாமேரி, பொருளாளர் அருள்ராஜ், மூத்த உறுப்பினர் சாமுவேல் மற்றும் விழா பொறுப்பாளர் சகாய ஆரோக்கிய முத்து தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.



