fbpx
Homeபிற செய்திகள்வங்கி முன் தொலைத்த பணத்தை மீட்டுத் தந்த கோவை போலீசார்

வங்கி முன் தொலைத்த பணத்தை மீட்டுத் தந்த கோவை போலீசார்

கோவை பி.என்.புதூரைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் கடந்த 10ம் தேதி டிபி ரோடு ஆர் எஸ் புரம் கனரா பேங்க் கிளையில் ரூபாய் ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வரும் பொழுது ரூபாய் நாற்பதாயிரம் மட்டும் கீழே தவறுதலாக விட்டுவிட்டார்.

அதன் அருகில் இருந்த நபர் ஒருவர் அந்த பணத்தை எடுத்து தனது பேண்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சென்று விட்டார். மேற்கண்ட புகாரைப் பெற்று ஆர் எஸ் புரம் புலனாய்வு பிரிவு காவல் ஆணையர் செல்லதுரை உத்தரவின் படி ஆய்வாளர் காமாட்சி நாதன் மேற்பார்வையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தலைமை காவலர்கள் சிந்தன். நாகூர் கனி. இரண்டாம் நிலை காவலர் ரஞ்சித் குமார் ஆகியோர் சுமார் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த நபரின் இருப்பிடம் கண்டறிந்து அந்த நபரும் இரண்டு நாட்கள் வெளியூர் சென்றிருந்த நிலையில் தாமாக முன்வந்து பணத்தை ஒப்படைப்பதாக இருந்தது தெரியவந்தது. பின்னர் அந்த நபர் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் அந்த பணம் கிருஷ்ணனிடம் உதவி ஆணையர் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img