Homeபிற செய்திகள்நீலகிரியில் 10 பேருக்கு ரூ.3.80 லட்சம் நிதியுதவி

நீலகிரியில் 10 பேருக்கு ரூ.3.80 லட்சம் நிதியுதவி

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பல்வேறு கோரிக்கைகள் தொடர் பாக மனுக்களை அளித்தனர். அவற்றை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு, மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண் மைத் துறை சார்பில் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 10 பேருக்கு ரூ.3.80 லட்சம் மதிப்பிலான இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகை பெறுவ தற்கான ஆணைகளை வழங்கினார்.
மேலும், மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய அம்பலமூலா அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 13 மாணவியருக்கு பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கி கவுரவித்தார். பொம்மலாட்டம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய நிர்மலாவுக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) லோகநாயகி, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், உதவி ஆணையர் (கலால்) மாதேஷ்வரன், மாவட்ட சமூக நல அலுவலர் பிரிவிணா தேவி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img