கோவை சோமையம் பாளையம் மகேஷ்வரி பவனில், நாராயண் சேவா சன்ஸ்தான் மற்றும் சூரத் டி.எம். பட்டேல் குடும்ப அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக் கான இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் 3டி பிரிண்டெட் நாராயண் மாடுலர் செயற்கைக் கால் அளவீட்டு முகாம் நடை பெற்றது.
முகாமில் 515க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனா ளிகள் பங்கேற்றனர். இதில் 411 பேருக்கு செயற்கைக் கால்கள் மற்றும் காலிப் பர்களுக்கான அளவீடுகள் எடுக்கப்பட்டன. மேலும், 10 பேர் இலவச திருத்து அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டனர்.

முகாமை ஹரிஷ் பாய் டி.பட்டேல் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மகேஷ்வரி சபா தலைவர் கோபால்ஜி மகேஷ்வரி தலைமை வகித்தார். ராஜஸ்தானி சங்க தலைவர் சந்தோஷ் மூந்த்ரா, மகாவீர் கௌசாலா தலைவர் பிரசன்ன கோத்தாரி உள் ளிட்டோர் கலந்து கொண் டனர்.முகாம் ஒருங்கிணைப் பாளர்கள் அச்சல் சிங் பாட்டி, ஹரி பிரசாத் லத்தா ஆகியோர், தேர்வு செய்யப்பட்ட பயனாளிக ளுக்கு அடுத்த 1 முதல் 2 மாதங்களில் இலவசமாக நாராயண் செயற்கைக் கால்கள் பொருத்தப்படும் என தெரிவித்தனர்.
ஜப்பான் மற்றும் ஜெர்மனி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இச் செயற்கைக் கால்கள் எடை குறைவாகவும், எளிதில் பயன்படுத்தக்கூடியதாகவும் இருப்பதால் மாற்றுத் திறனாளிகள் சுலபமாக இயங்க முடியும் என தெரி வித்தனர்.



