fbpx
Homeபிற செய்திகள்திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் .க.தர்ப்பகராஜ், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோ றும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்தில் திருவண்ணா மலை மாவட்டத்தின் பல் வேறு பகுதிகளிலிருந்து வருகை தரும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவ ரிடம் வழங்கி வருகிறார்கள்.
அதன்படி நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கல்வி உதவித்தொகை வங்கிக்கடனுதவி, முதியோர் உதவித்தொகை வீட்டும னைப்பட்டா, சாதிச்சான்று. வேலை வாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளி களுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள் பிரதான் மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம். வேளாண்மைதுறை சார்ந்த பயிர்க்கடன்கள், புதிய நீர் தேக்கதொட்டி அமைத்துதருதல், தாட்கோ மூலம்கடனுதவி, கூட்டுறவு சங்கங்களில் பயிர்கடன்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 576 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. இக்கூட்டத்தில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வுகாண அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.

மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தலின்படி செய்யார் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 69 மனுக்களும், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 69 மனுக்களும் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர் களிடம் வழங்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img