கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அழகிரி கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி சரகத் திற்கு உட்பட்ட 2025-2026ம் நிதியாண்டில் 6 கோடியிலிருந்து 8 கோடிக்கும் அதிகமான கடன்கள் வழங்கிய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், குவிந்த நட்டத்திலிருந்து நிகர லாபம் அடைந்த சங்கங்கள், தவணைத்தவறிய கடன்கள் அனைத்தும் வசூல் செய்த சங்கங்கள், கடந்த நிதியாண்டில் நிரந்தர வைப்பு நிதி திரட்டிட அனுமதி பெற்று ரூபாய் 1 கோடிக்கும் அதிகமாக நிரந்தர வைப்புகள் (FD) பெற்ற சங்கங்கள் மற்றும் நிதி ஆதாரக்குறைவு சம மின்மையிலிருந்து மீண்டு வந்த சங்கங்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சி யில் கோயம்புத்தூர் சரக துணைப்பதிவாளர் தினேஷ் குமார், பொள்ளாச்சி சரக துணைப்பதிவாளர் சுவேதா, துணைப்பதிவாளர் பணியாளர் நல அலுவலர் ஆனந்தன், துறை அலுவலர்கள், சங்க செயலாளர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



