கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் கொண்டாடப்பட்டது. இதில் மருத்துவமனை ஊழியர்களுக்கு கை சுத்தம் என்பது மிகவும் அவசியமான ஒன்று. இது கிருமிகள் பரவுவதைத் தடுத்து, நோயாளிகளின் உயிரைக் காப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. தகுந்த நேரத்தில் கைகளைச் சுத்தம் செய்வதன் மூலம் தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க முடியும் என்பதை வலியுறுத்தினர்.
இந்நிகழ்ச்சியை கேம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்கு னர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி தொடங்கி வைத்து கை சுத்தத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறினார். தொடர்ந்து பேசிய மருத்துவ இயக்குனர் முருகன், மருத்துவ மனையின் அனைத்துப் பிரிவுகளிலும் ஊழியர்கள் முறையாகவும், தொடர்ச் சியாகவும் கை சுத்தத்தைப் பின்பற்று வதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இந்த விழாவின் ஒரு பகுதியாகப் ‘கையெழுத்து இயக்கம்‘ நடைபெற்றது. இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.



