fbpx
Homeபிற செய்திகள்2025-26 நிதி ஆண்டில் புதிய உச்சம் தொட்ட போர்ஸ் மோட்டார்ஸ்

2025-26 நிதி ஆண்டில் புதிய உச்சம் தொட்ட போர்ஸ் மோட்டார்ஸ்

போர்ஸ் மோட்டார்ஸ் லிமிடெட், 2026 மார்ச் 31 அன்று முடிவடைந்த நான்காம் காலாண்டு மற்றும் 2025–26 நிதியாண்டிற்கான நிதி முடிவுகளை அறிவித்துள்ளது.

நிறுவனம் தனது வரலாற்றிலேயே சிறந்த முழு ஆண்டு நிதிச் செயல்திறனைப் பதிவு செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் மொத்த விற்பனை 20 சதவீதம் உயர்ந்து, உள்நாட்டு சந்தையில் வலுவான வளர்ச்சி வெளிப்பட்டுள்ளது. வேன் பிரிவில் நிறுவனத்தின் முன்னணி நிலை தொடர்ந்ததுடன், டிராவலர் தளம் 70 சதவீதத்திற்கும் அதிகமான சந்தைப் பங்கைக் தொடர்ந்து தக்கவைத்துள்ளது.

உயர்தர பகிர்வு போக்குவரத்து துறையில் அர்பானியா 100 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்து குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது. கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற சந்தைகளில் கிடைத்த வலுவான வரவேற்பின் காரணமாக, விற்பனை அளவு 70 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

இது குறித்து நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பிரசன் ஃபிரோடியா கூறுகையில், “அர்பானியாவின் வலுவான பங்களிப்பால் உயர்தர பகிர்வு போக்குவரத்து பிரிவில் முன்னோடியாக திகழ்கிறோம். டிராவலர் மற்றும் டிராக்ஸ் தளங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படுகின்றன. பாதுகாப்பு மற்றும் நிறுவன வாடிக்கையாளர்களுடனான எங்கள் தொடர்பு, எங்கள் பொறியியல் திறனையும் சவாலான சூழல்களில் செயல்படும் திறனையும் பிரதிபலிக்கிறது” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img