உலகெங்கிலும் உள்ள உழைக்கும் வர்க்கத்தின் உரிமைகளை பறைசாற்றும் உன்னத நாளான மே தின விழா, நாடு முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் மே தின விழா மற்றும் கொடியேற்று நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மாவட்டக் குழு அலுவலகச் செயலாளர் எஸ்.ராமசுப்பிரமணியம் இந்த நிகழ்விற்குத் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன் கட்சித் தோழர்கள் முன்னிலையில் செங்கொடியினை ஏற்றி வைத்துச் சிறப்புரையாற்றினார்.
கட்சியின் மையக்கிளைச் செயலாளர் என். ஜெயபால் மே தினத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார். இந்த எழுச்சிமிக்க நிகழ்வில் கட்சியின் கிழக்கு நகரக் குழுச் செயலாளர் என்.சுபாஷ், மாவட்டக் குழு உறுப்பினர் என். ஜாகீர் உள்ளிட்ட திரளான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் நிறைவாக, அலுவலகக் கட்சி கிளைச் செய லாளர் கே.ஆனந்தன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.



