fbpx
Homeபிற செய்திகள்பி.எஸ்.ஜி. இணை மருத்துவ அறிவியல் கல்லூரியின் 4வது பட்டமளிப்பு விழா

பி.எஸ்.ஜி. இணை மருத்துவ அறிவியல் கல்லூரியின் 4வது பட்டமளிப்பு விழா

பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு முக்கிய அங்கமான பி.எஸ்.ஜி. இணை மருத்துவ அறிவியல் கல்லூரியின் 4வது பட்டமளிப்பு விழா, நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது.

இந்த விழாவில் 80 பி.எஸ்.சி. தொழில்நுட்ப பட்டதாரிகள், 1 எம்.எஸ்சி. தொழில்நுட்ப பட்டதாரி மற்றும் ஒவ்வொரு பி.எஸ்சி. பாடப்பிரிவிலும் முதலிடம் பெற்ற மாணவர்கள் பட்டங்களையும் சான்றிதழ்களையும் பெற்றனர். கார்டியாக் டெக் னாலஜி துறையில் டாக்டர் ஜே.எஸ்.பி. தங்கப்பதக்கத்தை மிதுனா தேவி பெற்றார். ரேடியாலஜி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி துறையில் டாக்டர் என். இளங்கோ தங்கப்பதக்கத்தை காமேஸ் ராஜா பெற்றார். தொடர்ந்து டாக்டர் டி.எம். சுப்பாராவ் தலைமை உரையாற்றினார்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தியன் அசோசியேஷன் ஆஃப் பிசிஷியன் அசோசியேட்ஸ் முன்னாள் தலைவர் கோமதி சுந்தர் கலந்து கொண்டார்.

ரேடியோகிராபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி துறையைச் சேர்ந்த தனுஸ்ரீ எஸ். சிறந்த வெளியேறும் மாணவியாகத் தேர்வு செய் யப்பட்டார். இணை மருத்துவ அறிவியல் பாடத்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜே. கவிதா, முன்னாள் நிர்வாக அறங்காவலர்கள் மற்றும் டாக்டர் பானுமதி, டாக்டர் ஜெயச்சந்திரன் போன்ற முன்னோடிகளின் பங்களிப்பை நினைவுகூர்ந் தார். பி.எஸ்.ஜி சன்ஸ் அறக் கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல். கோபால கிருஷ்ணன் மற்றும் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு பட்டம் பெறும் மாணவர் களுக்கு தங்களது வாழ்த்து களைத் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img