டிஸ்பெப்சியா என்பது ஜீரணக்குறைபாடு. உலக மக்கள்தொகையில் சுமார் 20-30% பேர் இந்த பிரச்னையால் பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், வி.ஜி.எம் மருத்துவமனையில் 2022 முதல் 2024 வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 839 காரணம் தெரியாத டிஸ்பெப்சியா நோயாளிகள் சேர்க்கப் பட்டனர். இதில் 55% ஆண்கள். 52% பேரில் பி. pylori தொற்று கண்டறியப்பட்டது.
மீதமுள்ள 48% பேரில், ஹைட்ரஜன் மூச்சுப் பரிசோதனை மற்றும் EGG மூலம் பிற காரணங்கள் ஆய்வு செய்யப்பட்டது. பெரும் பாலான நோயாளி களில் காரணம் கண்டறிந்து சிகிச்சை அளிக்கப் பட்டது. வி.ஜி.எம் டிஸ்பெப்சியா மையத்தின் வாயிலாக சிகிச்சையில் புதிய மாற்றம் கிடைக்கிறது. எதிர்கால சிகிச்சை, அறிகுறிகளை மட்டும் அல்லாது அடிப்படை காரணங்களை கண்டறிவ தில் உள்ளது.
இப்போது நவீன மருத்துவம், பல மறைந்த காரணங்களை கதிர்வீச்சு இல்லாமல் துல்லியமாக கண்டறிய உதவுகிறது. உலகளாவிய வழிகாட்டுதல்களை பின்பற்றும் நவீன நோயறிதல் முறைகளை ஒருங்கிணைத்து, வி.ஜி.எம் டிஸ்பெப்சியா மையம், இந்த பிராந்தியத்தில் சர்வதேச தரத்திலான நியூரோகாஸ்ட்ரோ என்டராலஜி சிகிச்சையை கொண்டு வருகிறது. இது நீண்டகாலமாக பூர்த்தியாகாத மருத்துவ தேவைகளை நிறைவேற்றுகிறது.



