fbpx
Homeபிற செய்திகள்கடலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை: 459 பணியாளர்கள் தேர்வு - கணினி மூலம் ஒதுக்கீடு செய்த...

கடலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை: 459 பணியாளர்கள் தேர்வு – கணினி மூலம் ஒதுக்கீடு செய்த தேர்தல் நடத்தும் அலுவலர்

கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 126 மேஜைகள் அமைத்து, வாக்குகள் எண்ணப்படுகிறது. வாக்கு எண்ணும் பணிக்கு 459 பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு கணினி மூலம் பணி களை தேர்தல் நடத்தும் அலுவலர் ஒதுக்கீடு செய்தார்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ந்தேதி நடந்தது.கடலூர் மாவட்டத் தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்தப் பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 4 இடங்களில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

அதன்படி திட்டக்குடி, விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு எந்திரங்கள் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியிலும், நெய்வேலி,பண்ருட்டி சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு எந்திரங்கள் பண்ருட்டி வளாகத்திலும், கடலூர், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு எந்திரங்கள் கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரி மற்றும் காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் சி.முட்லுர் அரசு கலைக்கல் லூரியிலும் பாதுகாப்பாக வைக் கப்பட்டுள்ளன.

அனைத்து மையங்களும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டு முழு கண் காணிப்பில் உள்ளது. மேலும் கண்கா ணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பணிக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள பணியாளர்கள் கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி நேற்று கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கணிணி அறையில் நடை பெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி பணிகளை ஒதுக்கீடு செய்தார்.

இது பற்றி கலெக்டர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தலா 14 மேஜைகள் வீதம் மொத்தம் 126மேஜைகள் அமைக்கப்பட் டுள்ளன. வாக்கு எண் ணிக்கை பணியில் ஈடுபடுத்த 20 சதவீதம் கூடுதல் பணியா ளர்களுடன் நுண் பார்வையா ளர்கள் 153,கண்காணிப்பா ளர்கள் 153,உதவியாளர்கள் 153 என மொத்தம் 459 பணி யாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இன்று (வியாழக்கிழமை) முதற்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது என்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் புண்ணியகோட்டி, அனைத்து சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img