பஞ்சாப் நேஷனல் வங்கியின் கோவை வட்ட அலுவலகம் சார்பில் சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவன தொழில் முனை வோர் மெகா நேரடித் தொடர்பு திட்டம் 2026 (அவுட்ரீச்) நிகழ்ச்சி, ஈரோடு எம்சிசி கிளையில் நடைபெற்றது. இதனை வங்கியின் துணைப் பொதுமேலாளர் மற்றும் வட்ட துணைத் தலைவர் திரு.பங்கஜ் குமார் தலைமை தாங்கி, வாடிக்கையாளர்களுக்கு முன் அங்கீகரிக்கப்பட்ட கடன் அனுமதி கடிதம் வழங்கினார்.
நிகழ்வில் ஈரோடு மாவட்டத்தில் தற்போதைய தொழில் நிறுவனத்தினர் மற்றும் வாய்ப்புத் தேடும் தொழில் முனைவோர்கள் திரளாகப் பங்கேற்றனர். வாடிக்கையாளர்களுடன் அவர்களின் நிதி புரிதல்கள், தேவைகளை அறிந்து கொள்ளும்பொருட்டு வங்கி அலுவலர்கள் கலந்துரையாடினர். மேலும் சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கென பஞ்சாப் நேஷனல் வங்கியால் வகுக்கப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் எடுத் துரைத்தனர்.
இந்நிகழ்வு மாவட்ட தொழில் முனைவோர் களிடையே உற்சாகமான வரவேற்பை பெற்றது.



