தென்னிந்தியாவில் முதன்முறையாக, சிவா ட்ரேடிங் ஹவுஸ் மற்றும் ஜெ.ஜி.ஜி நிறுவனங் களின் சார்பில் பயண உபகரணங்கள் மற்றும் முழுமையான பயண தீர்வுகளை ஒரே இடத்தில் வழங்கும் புதிய ரீட்டெயில் பிராண்டான ‘கொங்கு டூரிஸ்டர்’, கோவையில் தனது பிரத்யேக ஷோரூமை துவக்கியுள்ளது.
புதிய ஷோரூமை இந்திய தொழில் வர்த்தக சபை தலைவர் ராஜேஷ் பி.லுந்த் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
கோவையை தலைமையிடமாகக் கொண்ட இந்த நிறுவனம், சாயிபாபா காலனி, என்.எஸ்ஆர் சாலை பகுதியில் அமைந்துள்ள தனது ஷோரூம் மூலம், சுற்றுலா பயணிகள், பிஸ்னஸ் டிராவலர்கள் மற்றும் விடுமுறை பயணிகளின் அனைத்து தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.‘
All Travel Solutions Under One Roof’என்ற நோக்கத்துடன், கொங்கு டூரிஸ்டர் பல்வேறு உயர்தர பயண தயாரிப்புகளை வழங்குகிறது.
இதுகுறித்து கொங்கு டூரிஸ்டர் நிறுவனத்தின் இயக்குனர்கள் நடராஜன், கோவிந்தகிருஷ்ணன், கிருஷ்ணகுமார், மகாதேவன் ஆகியோர் கூறுகையில், “கொங்கு டூரிஸ்டர்’ பிராண்டின் கீழ் ட்ராவல் ட்ராலிகள் மற்றும் கேரி-ஆன் பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளோம். இது எங்களின் முதல் பிரத்யேக ஷோரூம் ஆகும். வரும் காலங்களில், கொங்குமண்டலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மேலும் 5 புதிய ஷோரூம்களை தொடங்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.



