திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவண்ணாமலை மாநகரம், திருவண்ணாமலை ஒன்றியங் களில் திமுக இளைஞர் அணி மற்றும் ஸ்டாலின் மகளிர் படையினர், அமைச்சர் எ.வ.வேலுவை ஆதரித்து கிராமம், கிராமமாக, வீடு, வீடாக வாக்குசேகரித்தனர்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின், திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான எ.வ.வேலுவை ஆதரித்து, திருவண்ணாமலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவண்ணாமலை மாநகராட்சி பகுதிகளிலும், திருவண்ணாமலை ஒன்றியத்திற் குட்பட்ட 32 ஊராட்சி, தண்டராம்பட்டு கிழக்கு ஒன்றியம் 10 ஊராட்சிகளிலும் திமுக இளைஞரணியினரும், ஸ்டாலின் மகளிர் படையினரும் கிராமம், கிராமமாகவும், வீடு, வீடாகவும் வாக்குசேகரித்து வருகின்றனர்.



