fbpx
Homeபிற செய்திகள்ஊட்டி நாசரேத் பள்ளியில் ஐரீஸ் என்ற மனித ரோபோ அறிமுகம்

ஊட்டி நாசரேத் பள்ளியில் ஐரீஸ் என்ற மனித ரோபோ அறிமுகம்

ஊட்டி நாசரேத் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஐரீஸ் என்ற மனித ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அமேஸ்ஹெட்ஸ் நிறுவனம், மேக்கர்லேப்ஸ் தயாரிப்பான ஐரீஸ் மனித ரோபோவை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம், செயற்கை நுண்ணறிவு, கோடிங் மற்றும் ரோபோட்டிக்ஸ் கல்வியில் முன்னணி நிறுவனமான அமேஸ்ஹெட்ஸ், மேம்பட்ட மனித ரோபோவான ஐரீஸை ஊட்டி நாசரேத் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் மூலம் அதிநவீன தொழில்நுட்பத்தை பள்ளிகளுக்கு எளிதில் கிடைக்கச் செய்துள்ளது. இந்த ரோபோவை பள்ளி தாளாளர் புஷ்பா பயன்பாட்டுக்கு கொண்டு வந்து கூறும் போது, ‘இந்த மனித ரோபோ, சென்சார்கள் மற்றும் அதிநவீன ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மனிதர்களுடன் உரையாடும் திறன் கொண்டது.

மாணவர்களுடன் நேரடியாக உரையாடவும், தொடர்பு கொள்ளவும் கூடிய ஒரு இயற்பியல் மனித ரோபோ ஆகும். இந்த ரோபோ புத்திசாலித்தனமான முடிவெடுக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறது.
வன்பொருள் மற்றும் மென்பொருளை தடையின்றி ஒருங்கிணைக்கிறது. மனிதனைப் போன்ற அம்சங்கள் இயற்கையான கற்றல் அனுபவத்தை உருவாக்க ஐரீஸ் மனிதப் பண்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரோபோவில் தகவல் தொடர்புக்கு மைக்ரோஃபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள், அசைவுகளுக்கு மோட்டார்கள் மற்றும் ஆக்சுலேட்டர்கள், செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பிற்கு வைபை மற்றும் ப்ளூடூத் இணைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த ரோபோ மூலம் மாணவிகளுக்கு மேம்படுத்தப்பட்ட செயல்திறன் கிடைக்கும்’ என்றார்.
நிகழ்வில், பள்ளி முதல்வர், ஆசிரியைகள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img