கோவை மாநகரம் உருவாக காரணமான கிருஷ்ண போயருக்கு மணிமண்டபம் கட்ட வலியுறுத்தி சட்டமன்றத்தில் பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு போயர் சங்கம் வரும் சட்டமன்றத் தேர்தலில நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பொள்ளாச்சியில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த போயர் நல சங்கம் சார்பில் அதன் மாநில செயலாளர் சதீஷ் நூற்றுக்கு மேற்பட்டோருடன் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில துணைத்தலைவரும் பொள்ளாச்சி திமுக கூட்டணியின் வேட்பாளருமான நித்தியானந்தம் முன்னிலையில் திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவினை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து போயர் சங்க மாநில செயலாளர் சதீஷ் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், பல வருடங்களாக எங்கள் சமூகத்தினர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் சட்டமன்றத்தில் கிருஷ்ண போயருக்கு மணிமண்டபம் அமைக்க வலியுறுத்தி பேசிய கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநில செயலாளர் ஈஸ்வரன் பேசினார். அதற்காக எங்கள் சமூகத்தைச் சார்ந்த மக்கள் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, உடுமலை என பல பகுதிகளில் இருக்கிறார்கள். ஒவ்வொரு தொகுதியிலும் 10 ஆயிரத்துக்கு குறையாமல் எங்கள் வாக்குகள் உள்ளன. இந்த ஓட்டுகள் மூலம் அதிமுக வெற்றி பெற்றுள்ளது இந்த முறை திமுக கூட்டணிக்கு எங்கள் ஆதரவு அளித்துள்ளோம். இவ்வாறு மாநில செயலாளர் சதீஷ் தெரிவித்தார்.
பொள்ளாச்சி சட்டமன்ற வேட்பாளர் நித்தியானந்தம் கூறுகையில், அவர்களுக்கு உண்டான அங்கீகாரத்தை இதற்கு முன்னால் ஆண்டு கொண்டு இருந்த அதிமுக அரசு வழங்கவில்லை. தற்போது ஆளுகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அதற்கு உண்டான அங்கீகாரத்தை வழங்குவார் என்ற நம்பிக்கையுடன் ஆதரவு தெரிவித்துள்ளனர், என்றார்.



