fbpx
Homeபிற செய்திகள்சீரற்ற இருதய துடிப்பு சிகிச்சையில் கேஎம்சிஹெச் மருத்துவமனை சாதனை

சீரற்ற இருதய துடிப்பு சிகிச்சையில் கேஎம்சிஹெச் மருத்துவமனை சாதனை

கேஎம்சிஹெச் சீரற்ற இதயத் துடிப்பு குறைபாட்டிற்கான சிகிச்சையில் ஒரு முக்கிய சாதனையை எட்டியுள்ளது.

இதயத் துடிப்பு சீராக இல்லாத நோயாளிகளுக்கு வழங்கப்படும் அதிநவீன ‘கிரையோ அப்லேஷன்’ சிகிச்சையை 50 பேருக்கு வெற்றிகரமாகச் செய்து கேஎம்சிஹெச் சாதனை படைத்துள்ளது.

இந்த மைல்கல்லை எட்டிய இந்தியாவின் மிகச்சிறந்த 6 மருத்துவமனைகளில் ஒன்றாக கேஎம்சிஹெச் இணைந்துள்ளது.

இதயத் துடிப்பு சீரற்ற நிலையில் இருந்தால் அது இரத்தக் கட்டிகளை உரு வாக்கி, பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை 3 முதல் 5 மடங்கு வரை அதிகரிக்கிறது.

தற்போதுள்ள மிக மேம்பட்ட தொழில்நுட்பமான ‘கிரையோபலூன்’ முறையை கேஎம்சிஹெச் இந்த சிகிச்சைக்குப் பயன்படுத்துகிறது. இதில் அறுவை சிகிச்சை இன்றி, தொடைப் பகுதியில் ஒரு சிறிய துளை வழியாக பலூன் போன்ற ஒரு கருவி இதயத்திற்குச் செலுத்தப்படும்.

அங்கே நைட்ரஸ் ஆக்சைடு வாயு மூலம் அதிகப்படியான குளிர்ச்சி உருவாக்கப்பட்டு, ஒழுங்கற்ற மின் தூண் டல்கள் ஏற்படுத்தும் திசுக்கள் உறைய வைக்கப்படும். இதனால் இதயத் துடிப்பு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது.

இது குறித்து கேஎம்சிஹெச் தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி “இந்த 50-வது கிரையோஅப்லேஷன் மைல் கல்லை எட்டியிருப்பது, இந்திய மக்க ளுக்கு உலகத்தரம் வாய்ந்த மருத்துவ தொழில்நுட்பத்தை கொண்டு சேர்ப்பதில் கேஎம்சிஹெச் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்கு ஒரு சான்றாகும்” என்றார்.

நிர்வாக இயக்குனர்அருண் பழனிசாமி, “இந்த சாதனையைப்படைத்த ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் சிறப்பு மையத்தின் மருத்துவக் குழுவினருக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img