கோவை கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘விருட்சம் 2026’ என்ற பெயரில் “என் கல்லூரி, என் வளர்ச்சி” என்ற கருப்பொருளில் 17வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
கேபிஆர் குழுமங்களின் தலைவர் கே.பி ராமசாமி தலைமையில் நடைபெற்ற இதில் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் கல்வி கூட்டாண்மை பிரிவு (தமிழ்நாடு – புதுச்சேரி) பிராந்தியத் தலைவர் ரவிகுமார் மூர்த்தி தலைமை விருந்தினராகவும் “ஓ மை காட்” நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் “ஹாப்பி மஸ்காட்ஸ்” நிறுவனத்தின் இணை நிறுவனர் மைக் முரளி சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று கல்வி, ஆராய்ச்சி மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகள் மற்றும் பேராசிரியர்களுக்கு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார்.
கல்லூரியின் செயலர் காயத்ரி ஆனந்தகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் முனைவர் தேவி பிரியா ஆண்டறிக்கையை வாசித்தார்.
மேலும், நாஸ்காம் நிறுவன இயக்குநர் மற்றும் மாற்றம் அறக்கட்டளையின் இணை நிறுவனர் உதயசங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சி மாணவர்களுக்கு தொழில்நுட்ப அறிவுடன் சமூகப் பொறுப்பையும் இணைத்து வளர வேண்டும் என்ற முக்கிய செய்தியை வலியுறுத்தும் வகையில் நடைபெற்றது. விழாவில் மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் பங்கேற்றனர்.



