மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தூத்துக்குடி மாநகரம் – 1ம் ரயில்வே கேட் காந்தி சிலை அருகே தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.
இதில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு திராவிட மாடல் ஆட்சியின் கடந்த ஐந்தாண்டு சாதனைகளை விளக்கி உரையாற்றினார்.
மேலும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத்தலைவர் ஏ.பி.சி. சண்முகம் பேசுகையில், தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சியே தொடர வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட பொருளாளர் சுசி ரவீந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் ராஜமோகன் செல்வின், மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட பிரதிநிதி ராஜ்குமார், வட்டச் செயலாளர் சாமிநாதன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநகர மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மாடசாமி, தனலட்சுமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி முத்து, மதிமுக நிர்வாகி நக்கீரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி விமல் வங்காளியார், தேமுதிக நிர்வாகிகள் தயாள லிங்கம், வல்லரசு துரை, சமத்துவ மக்கள் கழக நிர்வாகி அற்புதராஜ், மக்கள் நீதி மய்ய நிர்வாகி ஜவகர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மீராசா, மனிதநேய மக்கள் கட்சி யூசுப், மனிதநேய ஜனநாயக கட்சி முகமது ஹசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



