fbpx
Homeபிற செய்திகள்அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த விசிக நிர்வாகிகள்

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த விசிக நிர்வாகிகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊத்தங்கரை அடுத்த பெருமாள்நாயக்கன்பட்டி கிராமத்தைச் சார்ந்த தொழிலதிபர் பழனிச்சாமியை கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில செயலாளராக நியமனம் செய்து அறிவிப்பு செய்துள்ளார்.

இந்த நிலையில் பெருமாள் நாயக்கம்பட்டியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில செயலாளர் பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செய்தார், நிகழ்ச்சிக்கு கட்சியின் கிருஷ்ணகிரி மண்டல பொது நிர்வாக துணை செயலாளர் ஜிம்மோகன், இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையின் மாநில செயலாளர் வழக்கறிஞர் சங்கத்தமிழ் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக ஊர் பொதுமக்கள் பட் டாசு வெடித்து மேளதாளம் முழங்க வாண வேடிக் கையுடன் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அப்பொழுது விசிக நிர்வாகிகள் திருப்பதி, பட்டாபி, குயில் தாஸ், எம்.முருகேசன், திருக்கலை, கோகுல கண்ணன், கவி, மனோஜ், கமல், சுபாஷ், ஊர் நாட்டாமை திருமயில், எம்,குமார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img