fbpx
Homeபிற செய்திகள்நிர்மலா கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு

நிர்மலா கல்லூரியில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு

கோவை சுங்கம் நிர்மலா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சட்டமன்ற பொது தேர்தல் -2026ஐ முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் தலைமையில் 100 சதவீத வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணை யாளர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மகேஸ்வரி, கோய முத்தூர் தெற்கு (120) தெற்கு சட்டமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரேசன், பட்டதாரி மேற்பார்வையாளர் மற்றும் தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர் நிர்மலா கிருஷ்ணமூர்த்தி, நிர்மலா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மேரி பபியோலா, கல்லூரி மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதலாவதாக மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர், கல்லூரியில், 100% வாக்குப்பதிவு தொடர்பாக கையெழுத்து இயக்கத்தில், கையொப்பமிட்டு விழிப்புணர்வு பணி களை தொடங்கி வைத்தும், வாக்குப்பதிவு அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தினை நேரில் பார்வையிட்டு, 100% வாக்குப்பதிவு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான தொடர் நிகழ்வுகளை பார்வையிட்டார்.


மேலும், கல்லூரி கூட்டரங்கில், பாப்பநாயக்கன்புதூர் மாநகராட்சி பள்ளி மாணவியர்களின் கும்மி ஆட்டத்தையும், சேரன்மாநகர் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவியர்களின் ஜமாப் மற்றும் கோலாட்டத்தினையும், அங்கு திரையிடப்பட்ட வாக்கு வீரன் என்கிற தேர்தல் விழிப்புணர்வு குறும்படத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார். தொடர்ந்து, வாக்காளர் உறுதிமொழி ஏற்றுக்கொள்ளப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img