சேத்தியாத்தோப்பு குறுக்குரோட்டில் உள்ள எஸ்.டி.ஈடன் மெட்ரிக் பள்ளியில் 7ம் ஆண்டு, ஆண்டு விழா பள்ளி வளா கத்தில் நடைபெற்றது. பள்ளி தாளாளர் தீபக் தாமஸ், பள்ளி முதல்வர் டாக்டர் சுகிர்தா தாமஸ், இணை இயக்குநர் பவித்ரா தீபக் மற்றும் தலைமையாசிரியை சாந்தி முன்னிலை வகித்த னர். தமிழ் ஆசிரியர் பாக்கிய சாமி வரவேற்றார். பள்ளி துணை முதல்வர் சாந்தி ஆண்டறிக்கை வாசித்தார்.
பள்ளி மாணவிகள் ஐஷ்வர்யா, இனியா ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். சிறப்பு விருந்தின ராக சன்டிவி புகழ் பட்டிமன்ற பேச்சாளர் அருண் கலந்து கொண்டு படிப்பில் சிறந்து விளங்க மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பயனுள்ள கருத்துக் களை எடுத்துரைத்தார். தொடர்ந்து மழலைகளின் வரவேற்பு நடனம், பரத நாட்டியம், இசை, மெழுகு நடனம், மவுன மொழி நடனம், குழு நடனம், பஞ்சாபி நடனம், கராத்தே, சிலம்பம் மற்றும் மாணவர்க ளின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
பின்னர் படிப்பிலும், விளையாட்டிலும் முதன்மை பெற்ற மாணவர் களுக்கு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. அறிவியல் ஆசிரியை விஜய லட்சுமி நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் பலர் கலந்து கொண்டனர்.



