திருவண்ணாமலை கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு அரங்கத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் (ICDS) சார்பில் நடைபெற்ற சமூக வளைகாப்பு விழாவில், தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர் வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கு திருவண் ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்ப கராஜ் முன்னிலை வகித்தார்.
கர்ப்பிணி பெண்கள் மகப்பேறு காலத்தில் சத்தான உணவுகளை உட்கொண்டு உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, பராமரிப்பு உதவித்தொகை மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுவதுடன், மருத்துவ ஆலோச¬ னகளைப் பெறும் வகையில் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான குழந்தை களைப் பெறுவதற்கான விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் இத்தகைய சமூக வளைகாப்பு விழாக்கள் மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 2,127 அங்கன்வாடி மையங்களில் தற்போது 11,721 கர்ப்பிணி தாய் மார்கள் பதிவு செய்து அரசு நலத்திட்டங்களின் பயனை பெற்று வருகின்றனர்.
அதன்படி, இன்றைய விழாவில் திருவண் ணாமலை நகர்ப்புறம், திருவண்ணாமலை கிராமப் புறம், துரிஞ்சாபுரம் மற்றும் கீழ்பெண்ணாத்தூர் ஆகிய நான்கு ஒன்றியங்களைச் சேர்ந்த 410 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமூக வளைகாப்பு விழா நடத்தப்பட்டு, அவர்களுக்கு சீர்வரிசை பொருட்களை சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி வழங்கினார்.
மேலும், கர்ப்பிணி தாய்மார்களுக்கு சத்தான சரிவிகித உணவின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் சிறப்பு கண்காட்சியும் நடத்தப்பட்டது. இதில் சிறு தானியங்கள், காய்கறிகள், கீரை வகைகள் உள்ளிட்ட ஊட்டச்சத்து உணவுப் பொருட்கள் காட்சிப் படுத்தப்பட்டு, தாய் மார்களுக்கு ஆரோக் கியமான உணவு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப் பகராஜ், திருவண்ணாமலை மாநகராட்சி தாமரை நகர் பகுதியில் அமைந்துள்ள நடு நிலைப்பள்ளி வாக் குச்சாவடி மையத்தை பார்வையிட்டு, வரவி ருக்கும் தமிழ்நாடு சட்ட மன்ற பொதுத்தேர்தல் 2026-ஐ முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளை ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, துணை மேயர் ராஜாங்கம், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் ஏஞ்சலின் சிந்தியா ராணி (திருவண்ணாமலை நகரம்), பாரதி (கீழ்பெண்ணாத்தூர் வட்டாரம்) மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



