fbpx
Homeபிற செய்திகள்கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் சிறுநீரக ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு

கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் சிறுநீரக ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான சிறுநீரகச் சிகிச்சையில் முன்னோடியாகத் திகழும் கோவை ஜி.கே.என்.எம் மருத்துவமனை, உலக சிறுநீரக தினத்தை முன்னிட்டு சிறுநீரக ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

இதில் சிறுநீரகவியல் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று பி.வி.எம் குளோபல் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினர்.
இந்நிகழ்ச்சி ஜி.கே. என்.எம் புறநோயாளிகள் மருத் துவ மையத்தின் மருத் துவ இயக்குநர் டாக்டர்.ராக வேந்திரா தலை மையில் நடைபெற்றது.

இதில் பெரியவர் களுக்கான சிறுநீரக நிபுணர்கள் டாக்டர் ராமச்சந்திரன் மற்றும் டாக்டர் ஜெயப் பிரகாஷ். குழந்தைகளுக்கான சிறுநீரக நிபுணர் டாக்டர் அனுரேகா செல்வராஜ் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மஞ்சுநாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமூக ஆரோக்கியத் திற்கான ஒரு பகுதியாக, ஜி.கே.என்.எம் மருத்துவ மனை பள்ளி ஆரோக்கிய கூட்டாண்மை திட்டத் தை (School Health Partnership Program) அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், ஜி.கே.என்.எம் மருத்துவமனை “ஸ்கூல் ஹெல்த் பார்ட்னர்’-ஆக உருவெடுத்து, குழந்தைகளின் ஆரோக் கியம் மற்றும் சிறப்பு மருத்துவச் சேவைகளை மேம்படுத்தி சமூகத்தின் நம்பிக்கைக்குரிய குடும்ப மருத்துவமனையாகத் திகழ இலக்கு கொண்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img