திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் தலைமையில் வாக்குச்சாவடிகள் பிரித்தல் குறித்து அனைத்து அங்கீக ரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 23.02.2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, வாக்குச் சாவடிகளில் ஏதேனும் 1200 வாக்காளர்களுக்கு மேல் இருப்பின், அந்த வாக்குச் சாவடிக்கு. துணை வாக்குச் சாவடி ஏற்படுத்தல், வாக்குச் சாவடிகளில் தேவை ஏற்படின் வாக்குச் சாவடியை இடமாற்றம் செய்தல் மற்றும் வாக்குச் சாவடிகளில் பெயர் மாற்றம் இருப்பின் அதன் விவரம் ஆகியவற்றை முன்மொழி வுகளாக அனுப்புமாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 2516 வாக்குச்சாவடிகள் உள்ளது. அதன்படி அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்களும் கள ஆய்வு செய்து. சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் பிரமுகர்களுடன் கலந் தாய்வு கூட்டம் நடத்தி அதன் வரைவு வாக்குச் சாவடியின் பட்டியல் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கீ கரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பாக அளித்த கோரிக்கைக்கள் வாக்காளர் பதிவு அலுவலர்களால் பரிசீலனை செய்யப் பட்டுள்ளன. வாக்குச் சாவடி மையம் தொடர் பாக ஏதேனும் கருத்துக்கள் இருப்பின் அதனை 13.03.2026 மாலை 5.00 மணிக்குள் தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர் அல்லது உதவி வாக்காளர் பதிவு அலுவலரிடம் தெரிவிக் கலாம். இப்பட்டியல் 14.03.2026 அன்று தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்கு அனுப்ப உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



