fbpx
Homeபிற செய்திகள்தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: கோவையில் போலீஸ் கொடி அணிவகுப்பு

தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: கோவையில் போலீஸ் கொடி அணிவகுப்பு

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பொது மக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை அதிகரித்தும், தேர்தல் நாளில் அச்சமின்றி வாக்களிக்கவும் தேர்தல் காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை உறுதிப்படுத்தவும், சமூக விரோத செயல்களை தடுக் கவும் கோவை மாநகர காவல்துறை சார்பில் முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

கோவை மாநகர் சாய்பாபா காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அவிலா கான்வென்ட் பள்ளி முன்பு கொடி அணிவகுப்பு தொடங்கியது, இதை போலீஸ் துணை கமிஷனர் தேவநாதன் தொடங்கி வைத்தார்.

கொடி அணிவகுப்பானது தடாகம் ரோடு அவிலா கான்வென்ட் பள்ளியிலிருந்து தொடங்கி NSR ரோடு வழியாக மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் முடிவடைந்தது.

2.5 கிலோ மீட்டர் தூரம் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் சாய்பாபா காலனி காவல் உதவி ஆணையாளர் சரவணன், சி.ஆர்.பி.எப் துணை தளபதி சோனியா பிரபா, கோவை மாநகர காவல் துறை அதிகாரிகள், காவலர்கள், ஆயுதப் படை காவலர்கள், துணை ராணுவப்படையினர் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img