fbpx
Homeபிற செய்திகள்கோவை மாவட்டத்தில் முதன்முறையாக ஏசி பேருந்து பயணிகள் காத்திருப்பு அறை திறப்பு

கோவை மாவட்டத்தில் முதன்முறையாக ஏசி பேருந்து பயணிகள் காத்திருப்பு அறை திறப்பு

கோவையில் முதன் முறையாக குளிர்சாதன வசதியு டன் பயணிகள் காத்திருப்பு அறை திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவை பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளில் வேகமாக முன்னேறி வருகிறது. தொழில் வளர்ச்சியும் கல்வி நிறுவனங்களின் அதிகரிப்பும் காரணமாக மக்கள் தொகையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பல் வேறு உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் கோவையில் வெயில் அதிகரித்து வருகிறது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சூலூர் பேரூராட்சி மற்றும் எல்.ஜி மருத்துவமனை இணைந்து சூலூர் பேருந்து நிலைய வணிக வளாகம் முன் குளிர்சாதன வசதியுடன் கூடிய பயணிகள் காத்திருப்பு அறையை அமைத்துள்ளன. இதனை பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், மருத்துவமனை தலைவர் கோபிநாத், லதா கோபிநாத் ஆகியோர் திறந்து வைத்தனர்.

ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஏசி காத்திருப்பு அறை, கோவை மாவட்டத்திலேயே முதன் முறையாக அமைக்கப்பட்டுள்ளது. பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் இந்த குளுகுளு ஏசி காத்திருப்பு அறையில் அமர்ந்து காத்திருந்து, தங்களுக்குரிய பேருந்து வந்ததும் ஏறி சுலபமாக புறப்பட்டுச் செல்லலாம் என அங்கு இருந்த பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img