கோவை ஆவாரம் பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் பிவிஆர் ஃபுட்ஸ் அமைப்பின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சுபத்ரா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவிகளிடையே உரை யாற்றினார்.
தொழிலதிபராகத் தன் வாழ்வில் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட அவர், பெண்கள் தங்களது திறமைகளைக் கல்லூரிப் பருவத்திலேயே கண்டறியவும் வளர்த்துக் கொள்ளவும் பயிற்சி பெற வேண்டும் என்று குறிப்பிட்டார்.
தொடர்ந்து மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவிற்குத் தலைமை தாங்கிய கல்லூரி முதல்வர் முனைவர் A.சித்ரா இது பற்றிக் கூறும்போது, சமூக முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்பவர்கள் பெண்கள்.
மகளிர் தினத் தையொட்டி எங்கள் கல்லூரி மாணவிகள் நம் வாழ்வின் இன்றியமையாத அங்கமாகவும் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்கு உறுதுணையாகவும் இருக்கக்கூடிய சிறுவணிகர்கள், ஓட்டுனர்கள் போன்ற அதி கமாக அங்கீகரிக்கப்படாத பெண்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள் என்று தெரிவித்தார்.



