fbpx
Homeபிற செய்திகள்தமிழ்நாட்டில் முதன்முறையாக வலி, நோய்த்தணிப்பு சிகிச்சைக்கு ‘வலியில்லா நீலகிரி’ திட்டம்- குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில்...

தமிழ்நாட்டில் முதன்முறையாக வலி, நோய்த்தணிப்பு சிகிச்சைக்கு ‘வலியில்லா நீலகிரி’ திட்டம்- குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில் துவக்கம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில், வலியில்லா நீலகிரி (Pain Free Nilgiris) திட்டத்தினை, கூடுதல் முதன்மை செயலர் (சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை) பி.செந்தில்குமார், தமிழ்நாடு குழும இயக்குநர், தேசிய சுகாதார குழுமம் மரு.அ.அருண் தம்புராஜ் ஆகியோர் (காணொலி காட்சி வாயிலாக) முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட் சுமி பவ்யா தண்ணீரு தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்ததாவது:- நீலகிரி மாவட்டம் குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில் வலியில்லா நீலகிரி என்ற விரி வான மாவட்ட அளவிலான வலி மற்றும் நோய்த்தணிப்பு சிகிச்சைத் திட்டமானது இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது தமிழ்நாட்டில் முதல்முறையாக தொடங்கப்பட்டுள்ளது.

நாள்பட்ட நோய்களான புற்றுநோய், பக்க வாதத்தால் ஏற்படும் உடல் பாதிப்புகள் மற்றும் முதியோர்களுக்கு ஏற்படும் மூப்பு சார்ந்த நோய்களால் பாதிக் கப்பட்டுள்ள நோயாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறை, மைக்ரோலேண்ட் பவுண்டேஷன் (Microland Foundation – Pallium India) ஆகியவற்றுடன் அரசு-தனியார் பங்களிப்பு முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டமானது, அரசால் தொடங்கப்பட்ட முன்னோடித் திட்டமான “மக்களைத் தேடி மருத்துவம்“ திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. முதற்கட்ட பணியானது இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ளது.

தற்போதுள்ள மாவட்ட நோய்த் தணிப்பு சிகிச்சை மையத்தை (District Nodal Centre) வலுப்படுத்தியும், வீடுகளுக்கே சென்று வழங்கப்படும் வலி மேலாண்மை சேவைகளின் தரத்தை மேம்படுத்தியும், மருத்து வர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முறையான பயிற்சிகள் அளித்து, வலி நிவாரணம் மற்றும் நோய்த்தணிப்பு சிகிச்சை சேவை கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப்படுகிறது.

மேலும், எதிர்கால விரிவாக் கத்திற்காக ஒரு வலுவான மையக் கட்டமைப்பை உருவாக்கி நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மருத்துவச் செல வுகளைக் கணிசமாகக் குறைத்து தேவையற்ற மருத்துவமனை அனுமதிகளை குறைப்பதும், சிறந்த கூட்டாண்மை மற்றும் திறன்மேம்பாட்டின் மூலம், எந்தவொரு நோயாளியும் உரிய சிகிச்சையின்றி வலியால் அவ திப்படக்கூடாது என்பதை உறுதிசெய்வதும் “வலியில்லா நீலகிரி” திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இத்திட்டத்தின் மூலம் திறன்மேம்பாடு, பகிரப் பட்ட சேவைகள், மேற்பரிந்துரை வழிமுறைகள், மைய கிளை பராமரிப்பு முறை ஆகியவற்றை மையக்கருத்தாக கொண்டு இத்திட்டம் செயல் படுத்தப்படுகிறது. நோயாளிகள் எந்த குறிப்பிட்ட மையத்திற்கு செல்ல வேண்டும். அவர்களுக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சி நாளைய தினம் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடங்கப்படவுள்ளது.

மேலும், சமூகம் சார்ந்த சுகாதார அமைப்புகளை வலுப்ப டுத்துவதற்கும், தகுதியான அனைத்து பயனாளிகளுக்கும் சமமான, எளிதில் அணுகக் கூடிய மற்றும் தரமான நோய்த்தணிப்பு சிகிச்சைச் சேவைகளை வழங்கும் வகையில் இத்திட்டமானது தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. படிப்படியாக இத்திட்டம் விரிவு செய்யப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.ஸ்ரீனிவாசன், இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) மரு.ராஜசேகரன், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.சோமசுந்தரம், குன்னூர் நகர்மன்ற தலைவர் சுசீலா, இருப்பிட மருத்துவ அலுவலர் மரு.ரவிசங்கர், மைக் ரோலேண்ட் பவுண்டேஷன் நிறுவனர் கல்பனாகார், பாலியம் இந்தியா குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img