fbpx
Homeபிற செய்திகள்ஈரோட்டில் தேசிய அறிவியல் தினவிழாவில் இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் பங்கேற்பு

ஈரோட்டில் தேசிய அறிவியல் தினவிழாவில் இஸ்ரோ விஞ்ஞானி வீரமுத்துவேல் பங்கேற்பு

மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ஈரோடு வேளாளர் மகளிர் கல்லூரியில் தேசிய அறிவி யல் தினம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கந்தசாமி தலைமை வகித்தார். மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன், கல்லூரி முதல்வர் ஆர்.பார்வதி, முதன்மைக் கல்வி அலுவலர் இ.மான்விழி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். இஸ்ரோவின் திட்ட இயக்குனர் விஞ்ஞானி பி.வீரமுத்துவேல் விழாச் சிறப்புரையாற்றினார்.

பதினாறு கல்லூரிகளிலிருந்தும் பல பள்ளிகளிலிருந்தும் அறிவியல் ஆர்வமுள்ள 1,300 மாணவர்கள் பங்கேற்றனர்.
அவர்களுள் 60 அறிவியல் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவியர்களுக்கு விஞ்ஞானி வீரமுத்துவேல் பாராட்டுக் கேடயம் வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img