கோவை மாவட்டம் செட்டிபாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கஞ்சா, போதை மாத்திரைகள், போதை வஸ்த்துக்கள், செல் போன்கள், ஆவணங்கள் இல் லாத வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சோதனையில் பறிமுதல் செய் யபட்ட பொருட்கள் அனைத்தும் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தி கேயன் அவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து செய்தியாளர்க ளுக்கு பேட்டியளித்த அவர் கூறிய தாவது: கோவை மாவட்டத்தில் காவல்துறையினர் தொடர்ந்து போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பேரூர், கருமத்தம் பட்டி, செட்டிபாளை யம், மதுக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50 இடங்களில் ரகசிய தகவலின் அடிப்படையில் இரண்டு டிஎஸ்பிகள், 9 இன்ஸ்பெக்டர்கள், 300 காவலர்கள் சோதனை மேற்கொண்டனர்.
இதில் 22 ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 4.5 கிலோ கஞ்சா, 50 மில்லி கிராம் கஞ்சா ஆயில், சிந்தடிக் ட்ரக்ஸ், மெத்தபெட்டமின், கஞ்சா சாக்லேட் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 18 பேரிடம் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம். ஐந்து குற்றவாளிகளில் இரண்டு பேர் மீது ஏற்கனவே வழக்குகள் உள்ளது.

வெளி மாவட்டத்திலிருந்து தங்குவதற்கு மாணவர்கள் யாரேனும் வந்தால் வீட்டின் உரிமையாளர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் பெரும்பாலும் வெளியில் குற்றம் செய்துவிட்டு பலர் கோவை மாவட்டத்தில் தங்குகிறார்கள்.
எனவே வீட்டு உரிமையாளர் கள் வீட்டை வாடகை விடுவ தற்கு முன்பு அவர்களிடம் நன்கு விசாரிக்க வேண்டும்.
சந்தேகப்ப டும்படியாக இருந்தால் உடனடி யாக காவல்துறையில் தெரிவிக்க வேண்டும். கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் நடவடிக்கைகளில் மாற்றம் இருந்தால் உடனடியாக எச்சரிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மெத்தம் பெட்ட மின் எங்கிருந்து வந்தது என விசாரித்து வருகிறோம். போதைப்பொருள் ரயிலில் இருந்து வருவதாக தகவல் வந்துள்ளது.
கடந்த ஆண்டு 670 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள் ளது. ஆன்லைன் மூலமாக விற் பனை செய்து வருகிறார்கள். அதனையும் தடுக்க முயற்சி செய்து வருகிறோம்.
இவ்வாறு கண்காணிப்பாளர் கார்த்தி கேயன் தெரிவித்தார்.



