உலகின் முன்னணி ஐந்து கழிவுநீர் பம்ப் உற்பத்தியாளர்களில் ஒன்றான ஜெர்மனியின் ஹோமா பம்ப் நிறுவனம் மற்றும் எக்கி பம்ப் நிறுவனமும் இணைந்து அதிநவீன லினஸ் தொழில்நுட்ப கழிவுநீர் பம்ப் செட்டுகளை அறிமுகப்படுத்துகிறது.
எக்கியின் லினஸ் பம்ப் தொழில் நுட்பம், கழிவுநீர் பம்ப்களில் உள்ள மிக முக்கியமான சவால்களில் ஒன்றான அடைப்பு ஏற்படுவதற்கு முன்பே நீக்கித் தடுக்கும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுதும் 150க் கும் மேற்பட்ட நாடுகளில் வணிகம் செய்யும் ஹோமா நிறுவனம் பம்ப் தொழில் நுட்ப விரிவாக்க முயற்சிகளில் 300 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்து வருகிறது. அதில் ஒரு பகுதியை எக்கியுடனான கூட்டு வணிக விரிவாக்க மேம்பாடுகளுக்காக ஒதுக் கீடு செய்ய திட்டமிட்டு உள்ளது.
2030-ம் ஆண்டுக்குள் இந்திய நகர்ப்புற மக்கள் தொகை மட்டுமே 60 கோடியைத் தாண்டும் எனவே இம்மக்கள் தொகை அதிகரிப்பையும் கருத்தில் கொண்டு இந்திய தேவைகளுக்கேற்ப புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட எக்கி அதி நவீன தொழில் நுட்ப கழிவுநீர் பம்ப்கள் அதிக செயல்திறன் கொண்டவைகளாக வடிவ மைக்கப்பட்டுள்ளது.
இந்த கழிவுநீர் பம்பு கள் குடியிருப்பு வளாகங்கள், வணிக நிறுவன கட்டிடங்கள், தொழில்துறை கழிவுநீர் பயன்பாடுகள், நகராட்சி மற்றும் பரவலாக்கப்பட்ட கழிவுநீர் அமைப்புகளுக்கு ஏற்றது.
எக்கி பம்ப் குழும இணை தலைமை அதிகாரி கனிஷ்கா ஆறுமுகம் கூறியதாவது: ஜெர்மனியின் ஹோமா பம்ப்-ன் நவீன தொழில்நுட்பம் எக்கி பம்ப்-ன் உற்பத்தித் திறன் மற்றும் நாடு முழுதும் உயரிய வணிக சேவைகளை இணைப்பதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் நல்ல தரமான பம்புகளை வழங்குகிறது.
இந்தியா மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளுக் காக உலகத் தரம் வாய்ந்த கழிவுநீர் பம்புகளை உருவாக்கவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்
மேலும் எக்கி ஹோமா நிறுவனம் இந்தியா, ஆசியா மற்றும் பிற வளர்ந்து வரும் சந்தைகளுக்கு உயர்தர செயல்திறன் கொண்ட கழிவுநீர் பம்ப்களை வழங்கும் நிறுவனமாக திகழ்கிறது. இவ்வாறு கூறினார்.



