fbpx
Homeபிற செய்திகள்கோவையில் பெயின்டர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

கோவையில் பெயின்டர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி

கோவையில் பெயின்டர்களுக்கு நவீனதொழில் நுட்பங்களை கற்றுக் கொடுக்க இலவச திறன் மேம்பாட்டு திட்டத்தை ” ஸ்மைல் பவுண்டேசன் ” மற்றும் பெர்ஜர் பெயின்ட்ஸ் ஆகியவை இணைந்து தொடங்கி உள்ளன.

இது குறித்து பெர்ஜர் பெயின்ட்ஸ் இந்திய நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அபிஜித் ராய், ஸ்மைல் பவுன்டேஷன் இணை நிறுவனர் சாந்தனு மிஸ்ரா ஆகியோர் கூறியதாவது:-

பெயிண்டர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுக்க இந்த இலவச திறன் மேம்பாட்டு திட்டத்தை தொடங்கி உள்ளோம்.

வீடுகள் மற்றும் மரச்சாமான்கள் அலங்கார பெயிண்டிங் குறித்து புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படும்.

மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்

படிக்க வேண்டும்

spot_img