fbpx
Homeபிற செய்திகள்குழந்தைகளை இயல்பாக இருக்க விட்டால் எதிர்காலத்தில் சாதனையாளராக மாறுவார்கள் - பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா...

குழந்தைகளை இயல்பாக இருக்க விட்டால் எதிர்காலத்தில் சாதனையாளராக மாறுவார்கள் – பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா அறிவுரை

மேட்டுப்பாளையம் எஸ்.எஸ். வி.எம். விதான் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 12வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன், பள்ளி செயலர் மோகன் தாஸ் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர். பள்ளி மாணவி ஸ்மிர்தி வரவேற்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் பட்டிமன்ற பேச்சாளர் பர்வீன் சுல்தானா கலந்து கொண்டு பேசும்போது, `ஒவ்வொரு குழந்தைகளுக்கும் வாய்ப்புகளை உருவாக்கி கொடுங்கள்.

குழந்தைகளை இயல்பாக இருக்க விட்டால் நிச்சயமாக எதிர்காலத்தில் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு குழந்தைகளும் சாதனையாளர்களாக வருவதற்கான வாய்ப்புகளை அவர்களே ஏற்படுத்திக் கொள்வார்கள்` என்று அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் பேச்சு போட்டி, விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது. பள்ளி மாணவர் ஹர்ஷித் நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர்கள் பெற்றோர் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img