எமரால்டு ஜுவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் திட்டத்தின் கிரிஷா அறக்கட்டளையின் மூலம் காரமடையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் மாணவ மாணவிகளுக்காக கணினி அறிவியல் ஆய்வக கட்டிடம் மற்றும் மதிய உணவு சமை யல் அறை கட்டிடம் ரூ.9 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட் டது.
இந்தப் பள்ளியில் சுமார் 900 மாணவ மாணவிகள் கல்வி கற்று வருகின்றனர். 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்காக கணினி அறிவியலின் ஆய்வக கட்டிடம் புதுப்பிக்கப்பட் டது. சமையலறையும் புதுப்பிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து கணினி அறிவியல் ஆய் வக கட்டிடம் மற்றும் சமையலறை கட்டிடம் இரண்டும் பள்ளிக்கு ஒப்படைக்கும் விழாவானது நேற்று நடைபெற்றது.

இந்த விழாவில் எமரால்டு நிறுவனத்தின் பொது மேலாளர் குலதென்றல் கலந்துகொண்டு இந்த கட்டிடத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்.
பள்ளியின் தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்புரை வழங்கினார். எமரால்டு நிறுவனத்தின் பொது மேலாளர் கார்த்திக் கலந்து கொண்டு தலைமையுரை வழங்கினார்.
சிஎஸ்ஆர் திட்டத்தின் துணை மேலாளர் தினேஷ் குமார் திட்டத்தை பற்றிய விளக்க உரை வழங்கினார். பள்ளியின் உதவி ஆசிரியை சுந்தரி நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் எமரால்டு நிறுவனத்தின் மேலாளர்கள், அலுவலர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.



